திருச்சி மாவட்டத்தில் சூதாட்டக்காரர்கள். குட்கா விற்பவர்கள் மீது. காவல்துறை கைது செய்து நடவடிக்கை: - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, March 19, 2026

திருச்சி மாவட்டத்தில் சூதாட்டக்காரர்கள். குட்கா விற்பவர்கள் மீது. காவல்துறை கைது செய்து நடவடிக்கை:

 திருச்சியில்

திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், தாலிஞ்சி பாலம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து,  போலீசார்  அங்கு விரைந்து சென்று, சட்டவிரோதமாக பணம் வைத்த சூதாடிக் கொண்டிருந்த மலைக்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் பாட்சா (வயது 49), முருகானந்தம் (42), ரமேஷ் (37), செந்தில்குமார் (42) மற்றும் கருப்பையா (47) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கட்டு சீட்டு மற்றும் ரூ. 500 ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதேபோல், முசிறி உட்கோட்டம் காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல வேலி காடு பகுதியில் உள்ள முள் புதர் அருகே பணம் வைத்த சூதாடிய, தொட்டியம் பகுதியைச் சேர்ந்த கண்ணுப்பிள்ளை (56) மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த சசிகுமார் (51) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கட்டு சீட்டுகள் மற்றும் ரூ. 350 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும்

திருச்சியில் 

தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது


துறையூர் அருகே உள்ள பெருமாள்பாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து  போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த பெருமாள்பாளையம், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த நடராஜன் (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், வளநாடு காவல் எல்லைக்குட்பட்ட வேம்பனூர் பஜார் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை விற்ற வேம்பனூர் பகுதியைச் சேர்ந்த வீராசாமி (52) என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடமிருந்து  7 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த வளநாடு போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages