தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சியின் ஆதரவு யாருக்கு? தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:.... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, March 18, 2026

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சியின் ஆதரவு யாருக்கு? தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:....

 எடப்பாடி முதல்வராக அயராது உழைப்போம்:


சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு யாருக்கு என

தமிழ்த்தேசியக் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


தமிழ்த்தேசியக் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு

கட்சியின் நிறுவனத் தலைவர் 

தமிழ்நேசன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முல்லைநாதன் வரவேற்று பேசினார்.மாநில நிர்வாகிகள்

பாஸ்கரன், செல்வகுமார், முத்து சிவ.சங்கர்,

பசுமலை முரளி, கார்த்திக்,சூர்யா. ராஜசேகரன், வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில்

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு காவிரி படுக்கை மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தும், பல ஆண்டு காலமாக கிடப்பில் கிடந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்திய அதிமுக ஆட்சி மீண்டும் தொடர வேண்டும்.தமிழ்நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும் என்று உறுதியோடு இருக்க எங்களைப் போன்றவர்களுக்கு ஏழைகளின் உணர்வுகளை அறிந்த விவசாயிகளின் கஷ்டங்களை புரிந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும். என தமிழ்த்தேசியக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுத்து அதிமுக தலைமையிலான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தூத்துக்குடி மகேஸ்வரன்,அஜித் குமார் தங்கையா.கணேசன், துரை,நாகராஜ் குமரேசன், ஜோசப் சந்தியாகு,

பார்த்திபன் மகேஸ்வரன்,நிக்கோலஸ்

குருசாமி,சுதாகர்,அப்பா கண்ணு, சுரேஷ்,கோதண்டபாணி,கணேசன்,பார்த்திபன் வேல் செல்வம் வேல்,, ராஜா,ஆடியோ கலந்து கொண்டனர் முடிவில் திருச்சி மாவட்ட செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages