ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு - துணை போகும் அ.இ.அதிமுக வையும் கண்டித்து திருச்சி. மத்திய மாவட்ட தி.மு.க வினர் ஆர்பாட்டம் ! - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, February 12, 2026

ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு - துணை போகும் அ.இ.அதிமுக வையும் கண்டித்து திருச்சி. மத்திய மாவட்ட தி.மு.க வினர் ஆர்பாட்டம் !

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்தும், நூறு நாள் வேலை திட்டம் ஒழிக்கப்படுவதைக் கண்டித்தும் திமுக கூட்டணி கட்சியினா் திருச்சி மாவட்டத்தில்  வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.




திருச்சி மத்திய மாவட்ட திமுக, திருச்சி மேற்கு மாநகர திமுக ஆகியவை இணைந்து திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்ட செயலா் க. வைரமணி தலைமை வகித்தாா். மேயா் மு. அன்பழகன், முன்னிலை வகித்தாா். 

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஸ்ரீதா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எம்,. செல்வராஜ்,  மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், திராவிடா் கழக மாவட்ட தலைவா் ஆரோக்கியராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவா் ஹபிபுா் ரஹ்மான் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கண்டன உரையாற்றினா்.


இதேபோல், துவாக்குடி மலை, வாழவந்தான்கோட்டை, கூத்தைப்பாா், மணப்பாறை, துவரங்குறிச்சி, கீழக்குறிச்சி, மருங்காபுரி, வையம்பட்டி, பூலாம்பட்டி, செவல்பட்டி, வளநாடு, புத்தாநத்தம் என 13 இடங்களில் மத்திய அரசைக் கண்டித்தும், அதிமுக-வை கண்டித்தும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்தோா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages