22.2.2026 இடம்....திருச்சி .........கலைஞர் அறிவாலயம்: தி.மு.க வின் வெல்லும் தமிழ்ப்பெண்கள் பயிற்சிக் கூட்டம்:
தி.மு.கவின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிப் பாசறை கூட்டம், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் , மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது.
.தி.மு.க. மத்திய மாவட்ட செயளாலர் வைர மணி, பகுதி செயளாலர்கள் நாகராஜ், கமால் முஸ்தபா, இளங்கோ ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தி.மு.க.வின் மகளிர் அணியினரும், பெண்களும் பெருந் திரளாக கலந்து கொண்டனர். வரும் தேர்தலில் மகளிர் அணியினர் அனைவரும் திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு அரசு செயல்படுத்திய உரிமைத்தொகை, விலையில்லா பேருந்து பயணம் , தற்போது தமிழகத்தில் உரிமைத்தொகையால் பயன் பெரும் பெண்களிடமும், பொது மக்களிடமும் திடாவிட மாடல் அரசின், சாதனைகளை எடுத்துரைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா மகளிர் மத்தியில்உரையாற்றினார். அரசு சுயஉதவிக் குழுக்களில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு என்ன , என்ன அரசு சலுகைகள் உள்ளன எனவும் எடுத்தார். மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும் தருணத்தில் மகளிருக்கு மேலும் பல அரிய திட்டங்கள் செயல் படுத்த தமிழக முதல்வர், திராவிட மாடல் அரசில் செயல் படுத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் அமைச்சர் நேரு அவர்கள் வரும் தேர்தலில் தமிழ் நாட்டிலேயே அதிக வாக்குகளில் வெற்றி பெற உழைக்க மகளிர் அணியினரை கேட்டுக் கொண்டார்.

No comments:
Post a Comment