17 ஆண்டுகால ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் உறுப்புக் கல்லூரிகளில் கண்டனப் போராட்டம் திருச்சியில்நடந்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 16 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் மண்டல வளாகங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் கடந்த 17 வருடங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ள பல்வேறு பணிநலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு நீதி வேண்டி, தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் 'JUSTICE-447' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 முக்கிய வளாகங்களிலும், உறுப்புக் கல்லூரிகளிலும் ஒரே காலகட்டத்தில் (2008 மற்றும் 2009) பணியில் சேர்ந்த ஆசிரியர்களிடையே இன்று மிகப்பெரிய பதவி உயர்வு வேறுபாடு நிலவுகிறது. சென்னை வளாகங்களில் பணியில் சேர்ந்தவர்கள் பேராசிரியர்களாகவும் உயர் நிர்வாகப் பொறுப்புகளிலும் உள்ள நிலையில், உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலரும் தாங்கள் பணியில் சேர்ந்த அதே நிலையிலேயே தொடரும் அவலநிலை நீடிக்கிறது. மேலும், தகுதிகள் இருந்தும் பல ஆசிரியர்களுக்குப் பணிவரன்முறை ஆணை (பணியிணைப்பு ஆணை) வழங்கப்படாததால், கடந்த 14 முதல் 15 ஆண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் பணப்பலன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. என்றும்
இதுவரை 4 அரசுகளிடமும், 4 துணைவேந்தர்கள் மற்றும் 7 பதிவாளர்களின் நிர்வாகக் காலங்களைக் கடந்து தொடர்ந்து கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்தாலும், உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும்
இதனைக் குறிக்கும் வகையில்தான் '4 அரசுகள் + 4 துணைவேந்தர்கள் + 7 பதிவாளர்கள் = JUSTICE-447' என்ற அடையாளத்துடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும்
. கடந்த அக்டோபர் 31-க்குள் கோரிக்கைகள் தீர்க்கப்படும் என நிர்வாகம் அளித்த எழுத்துப்பூர்வ உறுதிமொழி நிறைவேற்றப்படாததால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் வேதனை ஏற்பட்டுள்ளதாகவும்,
உயர்கல்வித்துறை அமைச்சரிடம் விரிவான மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சினைகளில் நேரடியாகத் தலையிட்டு, உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களின் 17 ஆண்டுகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.
இன்றையப் போராட்டத்தில் அரியலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பண்ருட்டி, பட்டுக்கோட்டை, இராமநாதபுரம், திருக்குவளை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு வளாகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்,
வருகிற நவம்பர் 20 அன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறைச் செயலரைச் சந்தித்தும், தமிழகஅதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் அடுத்தகட்டப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment