உலக சர்க்கரை நோய் தினத்தில் சர்க்கரை நோய் பிரிவு திருச்சி ஹர்ஷ மித்ராவில் புதிதாக தொடங்கப்பட்டது.... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, November 14, 2026

உலக சர்க்கரை நோய் தினத்தில் சர்க்கரை நோய் பிரிவு திருச்சி ஹர்ஷ மித்ராவில் புதிதாக தொடங்கப்பட்டது....




திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில்.,

உலக சர்க்கரை நோய் கினத்தை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் பிரத்யேக பாத மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடக்கப்பட்டது.

திருச்சியில் இயங்கி வரும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனையில், சர்க்கரை உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, திருச்சி நாகமங்கலத்தில் நோயாளிகளுக்கான பிரத்யேக பாத மருத்துவ சிகிச்சைப் பிரிவு (Specialised Foot Clinic) தொடங்கப்பட்டது.


இந்த திறப்பு விழாவானது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர்.பி.சசி பிரியா....

அவர்களின் முன்னிலையில் டாக்டர். தங்கபாண்டியன்  ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு நாளடைவில் நரம்புகள் பாதிக்கப்படுவதாலும், கால்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதாலும் பாதங்களில் உணர்விழப்பு, புண்கள், தொற்றுகள் மற்றும் ஆறாத காய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சிலருக்கு கால்களை அகற்ற வேண்டிய மிக மோசமான நிலையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இத்தகைய பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் பல்வேறு சிக்கல்களையும், கால் அகற்றும் அபாயத்தையும் பெருமளவில் தவிர்க்க முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டு தொடங்கப்படும் இப்பிரிவில், வருகைதரும்  சிறப்பு பாத மருத்துவ நிபுணர் (Visiting Podiatrist) மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக மருத்துவ ஆலோசனைகளும் பரிசோதனைகளும் வழங்கப்பட்டது.

இப்பிரிவின் முக்கிய சேவைகளாக.,

-சர்க்கரை நோயாளிகளின் பாதங்களைப் பரிசோதித்து பாதிப்பு ஏற்படும் அபாயத்தைக் கண்டறிதல்.

-பாதங்களில் ஏற்படும் உணர்விழப்பு மற்றும் இரத்த ஓட்டக் குறைபாட்டை "..

மதிப்பீடு செய்தல்.

-சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதப் புண்கள் மற்றும் ஆறாத காயங்களுக்குசிறப்பு சிகிச்சை அளித்தல்.மற்றும்..."


பாதங்களில் ஏற்படும் தொற்றுகளைக் கண்டறிந்து உரிய சிகிச்சை மற்றும் காயப் பராமரிப்பு வழங்குதல்.

-கால் அகற்றுவதைத் தவிர்ப்பதற்கான உறுப்பு பாதுகாப்பு சிகிச்சை (Limb Salvage Management) மற்றும் தேவையான ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறைகளை மேற்கொள்ளுதல்,

-பாதப் பாதிப்புகளைத் தடுப்பதற்கான முறையான பராமரிப்பு மற்றும் சுயபரிசோதனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,

சர்க்கரை நோயாளிகளிடையே பாதப் புண்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் கால் அகற்றுதல் போன்ற பாதிப்புகள் பெரும்பாலும் உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறாததாலும், ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிப்பதாலும் ஏற்படுகின்றன.

 எனவே, பாதங்களில் சிறிய காயம், உணர்விழப்பு, வீக்கம், நிறமாற்றம் அல்லது ஆறாத புண்கள் தென்பட்டாலும் உடனடியாக சிறப்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றும்,,

"கால் பாதிப்புகளைத் தடுப்போம்; கால்களைப் பாதுகாப்போம்!" என்ற நோக்கத்துடன் தொடங்கப்படும் இந்தப் புதிய சிகிச்சைப் பிரிவு, சர்க்கரை நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, தவிர்க்கக்கூடிய உடல் ஊனங்களையும் கால் அகற்றுதலையும் குறைப்பதில் முக்கியப் பங்காற்றும் என ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது..


ஆரோக்கியமான பாதங்கள் -ஆரோக்கியமான வாழ்க்கை!

 என மருத்துவர் தங்க பாண்டியன் எளிமையான இயல்பான மொழியில் சிறப்பான விளக்கமளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages