மாசடைந்த குடிநீர் விநியோகத்தைக் கண்டித்து முழக்கம் :
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
திமுக கவுன்சிலர் தலைமையில் திரண்டதால் பரபரப்பு
திருச்சி மாநகராட்சி
57வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள அரசு காலனி, எம்.ஜி.ஆர் நகர், கொல்லங்குளம், பாரதி நகர் மற்றும் நல்ல தண்ணீர் கேணித் தெரு ஆகிய பகுதிகளில் முறையான குடிநீர் விநியோகம் இல்லாததைக் கண்டித்தும், மாசடைந்த குடிநீர் வழங்கப்படுவதைத் தடுத்த நிறுத்தக் கோரியும் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்திற்கு அந்த வார்டு திமுக கவுன்சிலர் முத்து செல்வம் தலைமை தாங்கினார்.
மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக சுகாதாரமற்ற, மாசடைந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.இதற்கிடையில் திமுக கவுன்சிலர் முத்து செல்வம் மற்றும்பொதுமக்களிடம் மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் சிங் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்
மென்ட் போலீசார் சம்படத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மேயர் அன்பழகன்
நிருபர்களிடம் கூறும் பொழுது பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாகக் குடிக்கத் தகுந்த தூய குடிநீரை தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

No comments:
Post a Comment