தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கிருஷ்ண தரிசன கண்காட்சி நடைபெற்றது - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, August 26, 2026

தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கிருஷ்ண தரிசன கண்காட்சி நடைபெற்றது

 தமிழ்நாடுகைத்திறத்தொழில்கள்வளர்ச்சிக் கழகம் (தமிழ்நாடு அரசு நிறுவனத்தின்

கிருஷ்ண தரிசன கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.


பூம்புகார் என்ற பெயரால் அழைக்கப்படும், தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், 1973ல் துவங்கப்பட்டு, தொன்மையான கலைகளை பாதுகாப்பதோடு, கைவினைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.


ஒவ்வொரு வருடமும், பண்டிகைக் காலங்களில் பல கண்காட்சிகளை நடத்தி வருவதைப் போல இந்த வருடமும் கிருஷ்ண தரிசன கண்காட்சி மற்றும் விற்பனையை 24/8/2026 முதல் 5/9/2026 வரை தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திருச்சி, சிங்காரத்தோப்பு, பூம்புகார் விற்பனை நிலையத்தில் நடைப்பெற்று வருகிறது.


இக்கண்காட்சியில் அனைத்து விதமான கிருஷ்ணர் சிலைகளும் விற்பனைக்கு உள்ளன. வெண்ணை கிருஷ்ணர், ஆலிலை கிருஷ்ணர், யசோதா கிருஷ்ணர், ராதா கிருஷ்ணர் கோவர்த்தன கிருஷ்ணர், கோபிகா கிருஷ்ணா, நர்த்தன கிருஷ்ணர், தவழும் கிருஷ்ணர், நவநீத கிருஷ்ணர், வேணுகோபால கிருஷ்ணர், தசா அவதார கிருஷ்ணர், சக்கரத்தாழ்வார், மற்றும் மரத்தால், பித்தளையால், மண்ணால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலைகளும், மற்றும் தஞ்சாவூர் ஓவியங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுயுள்ளன உள்ளன அனைத்து விதமான கிருஷ்ணர் சிலைகளுக்கும் 10 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக் கட்டணமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும்.

இக்கண்காட்சியில் ரூபாய் 150 முதல் 1லட்சம் வரை மதிப்பிலான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages