திருச்சி காவிரியில் மண்ணில் புதைந்து கொண்டு போராட்டம்: - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, August 2, 2026

திருச்சி காவிரியில் மண்ணில் புதைந்து கொண்டு போராட்டம்:



 ​காவிரியில் கழிவுநீருடன் இறங்கி விவசாயிகள் வினோத போராட்டம்!

​கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்",

​காவிரி ஆற்றுநீரை கர்நாடகா உரிய முறையில் திறந்து விடாததைக் கண்டித்தும், விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றுக்குள்  கழுத்தளவு  தண்ணீரில் இறங்கி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பா சாகுபடியும் செய்ய முடியாத சூழல் நிலவுகிற

இதனை கண்டித்தும்

விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும்

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 

ஞாயிற்று கிழமை இன்று 2.8.2026

திருச்சியில் 

விவசாயிகள் காவிரி ஆற்றில் 

இறங்கி உடலை மண்ணில் புதைத்து கொண்டு, கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டியபடியும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சங்கத் தலைவர் அய்யாகண்ணு

செய்தியாளர்களிடம் கூறியதாவது:

​"இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி உச்ச நீதிமன்றத்திற்கு அனைவருக்கும் உத்தரவிடும் அதிகாரம் உள்ளது. ஆனால், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் கூட மதிக்காமல் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறக்க மறுத்து வருகிறது.

​கேரளா மற்றும் நீலகிரி பகுதியில் மழை பெய்து கபினி அணைக்கு வரும் தண்ணீரைக்கூட நேரடியாக தமிழகத்திற்குத் திறக்காமல் பவானிசாகர் வழியே திருப்பி விடுகின்றனர். தமிழகத்தில் விவசாயத்தை அழிக்கவே மத்திய மற்றும் கர்நாடக அரசுகள் முயல்கின்றனவோ என்ற பயம் எழுகிறது.

​குறுவை சாகுபடி பொய்த்துவிட்ட நிலையில், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 2021-ஆம் ஆண்டு வரை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

​இது தொடர்பாக தமிழக அமைச்சர்களைச் சந்தித்து மனு அளித்துள்ளோம். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், விரைவில் சென்னையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்."

​இவ்வாறு அவர் கூறினார்.

​அரசியல் தலைவர்களின் கர்நாடக பயணம் மற்றும் அங்குள்ள அரசியல் நிலைமைகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற யார் குரல் கொடுத்தாலும் அதை நாங்கள் வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages