பதினொன்று ஆண்டுகளுக்கு மேல் உயர்த்தப்படாமல் உள்ள ஈசேவை மையக் கட்டணம் உயர்த்த நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு? - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 25, 2026

பதினொன்று ஆண்டுகளுக்கு மேல் உயர்த்தப்படாமல் உள்ள ஈசேவை மையக் கட்டணம் உயர்த்த நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு?


 இ-சேவை மைய உரிமையாளர்கள் திருச்சியில்

இ-சேவைக் கட்டண உயர்வு, மின் கட்டண மானியம், மற்றும் நலவாரியம் அமைக்க வலியுறுத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்கள்.



தமிழ்நாடு இ-சேவை மைய உரிமையாளர்கள் சங்கத்தின் (TNeCOA) சார்பில், இ-சேவை மைய உரிமையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை விளக்கி திருச்சியில் உள்ள தெப்பகுளம், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சேவியர் முன்னிலை வகித்தார்.

 டிஜிட்டல் சேவா போர்ட்டலில் (CSC) இ-சேவை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களுக்குப் புதிய இ-சேவை அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்றும்,

கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் உள்ள சேவைக் கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.150 ஆகவும், வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பக் கட்டணத்தை ரூ.250 ஆகவும், பட்டா விண்ணப்பக் கட்டணத்தை ரூ.350 ஆகவும் உயர்த்த வேண்டும் என்றும்,

இ-சேவை மையங்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும் என்றும்,

 இ-சேவை 2.0 மென்பொருள் வடிவமைப்பில் சங்கத்தின் நிபுணர் குழு வழங்கும் பரிந்துரைகளைப் பரிசீலிக்க வேண்டும் என்றும்

இ-சேவை மைய உரிமையாளர்களுக்குத் தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும்,

 குடும்ப அட்டையில் புகைப்படம் மாற்றுதல், பெயர் திருத்தம் மற்றும் ஸ்மார்ட் குடும்ப அட்டை அச்சிடுதல் உள்ளிட்ட சேவைகளை இ-சேவை மையங்கள் மூலம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.

பிறப்புச் சான்றிதழ்களில் திருத்தம் செய்வதற்கானவிண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும்,

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்றும்,

ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றுவதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்றும்,

ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிக்கும் பணிகளைத் தகுதியான இ-சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும் என்றும்

மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி தொடர்பான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் வசதியை ஏற்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றைப் பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும்,

கடந்த 5 ஆண்டுகளாக வேலைவாய்ப்புப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி, இணையவழியில் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பொருளாளர் சரவணக்குமார், துணைத்தலைவர்தலைவர்எச்.மூர்த்திசெயலாளர்ஜே.சேவியர்,பொருளாளர் எல்.சரவணக்குமார், ,துணைத் தலைவர்கள் ஜே.ஜெயப்பிரகாஷ்,எம்.கோபிக்,ஜி.விஜயலட்சுமி,இணைச்செயலாளர்கள்டி.லோகநாதன்,எஸ்.சுரேஷ்,எஸ்.அருள்செல்வம்,மகளிர்ஒருங்கிணைப்பாளர்எஸ்.கரோலினாள் உள்ளிட்ட 359க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கவனம் கொண்டு குறைகள் தீர நடவடிக்கை எடுக்குமா? அரசு !என ஆழமான எதிர்பார்ப்பு?

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages