திருச்சியில் விவசாயி சங்கத்தின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, September 18, 2026

திருச்சியில் விவசாயி சங்கத்தின் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது....



 பூ. விசுவநாதன் M.A., மாநில தலைவர் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில்
,திருச்சியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.


 பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிக்கு பேட்டிஅளித்தார். அப்பேட்டியில்

முழு விவசாய கடனையும்  

 தள்ளுபடி செய்யக்கோரி தமிழக விவசாய சங்கங்களின் பாதுகாப்பு இயக்கம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கம் போன்று 20 விவசாய சங்கங்கள் இணைந்து 24.9.2026 அன்று சென்னை தலைமை செயலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்பதை தெரிவித்தார்.


தமிழக முதலமைச்சர்  ஜோசப் விஜய் அவர்கள் தங்களது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்குகீழ் உள்ள விவசாயிகளுக்கு 100% முழு விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் சுஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50% விவசாய கடன் தள்ளுபடி செய்வோம் என்றும் வாக்குறுதி அளித்தார்கள் தற்போது ஒரு லட்சத்துக்கு கீழ் விவசாய கடன் பெற்றிருப்பின் ரூபாய் 75 ஆயிரம் முழு விவசாய கடன் தள்ளுபடி என்றும் ஒரு லட்சத்து மேல விவசாய கடன் பெற்றிருப்பின் ரூபாய் 35 ஆயிரம் விவசாய கடன் தள்ளுபடி என்றும் அறிவித்து 17 நிபந்தனைளை விதித்து விவசாய கடன் வசூலில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதோடு தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.


மேலும் விவசாய கடன் தள்ளுபடி கேட்டு தொடர்ந்த கடுமையான வெயிலிலும் மழையிலும் போராட்டம் நடத்தி வருகின்ற விவசாய சங்கங்களை காவல்துறை மூலம் ஒடுக்கவும் நசுக்கவும் நினைக்கும் தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார்.

. வருகின்ற 24.9.2026 அன்று சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு தமிழக விவசாய சங்கங்களின் பாதுகாப்பு இயக்கம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் போன்று 20 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து விவசாய கடன் தள்ளுபடி செய்யகோரியும் 17 நிபந்தங்களை கைவிடப் கோரியும் போராட்டம் நடத்தஉள்ளோம் என்பதை தெரிவித்துக் கொண்டார்.

 மேலும் தங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பட்சத்தில் 20 விவசாய சங்கங்கள் கூடி முடிவெடுத்து அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதா அல்லது போராட்டத்தை நடத்துவதா என நல்லமுடிவைதெரிவிப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages