திருச்சியில் தொல் திருமாவளவன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 15, 2026

திருச்சியில் தொல் திருமாவளவன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது...


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 

சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்தவர். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

ஸ்டாலின் உடல்நிலை குறைவால் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு ......

உங்கள் மூலம் அவர்களுக்குஉடல்நிலை சரியில்லை எனதெரிய வருகிறது  என்றும்

விரைந்து குணமடைய வேண்டும் என்றும், அவருடையசுற்று பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய பின்பு மருத்துவமனையில் சென்று சந்திப்பதாக கூறினார்.

அ. ராசா மீதும் சேகர்பாபு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் விமர்சிப்பதை தாண்டி 

தனிநபர் ரீதியாக ஒருமையிலே விமர்சித்தார் என்பது மிகுந்த அதிர்சியும் கவலையளிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட நெடிய பாரம்பரிய உள்ள பேரியக்கம்.

அண்ணாவையும், கலைஞரையும் விமர்சித்த போது நாகரிக வரம்பு மீறாமல் எதிர்கொண்டனர்.

முன்னாள் முதல்வரோடு தொடர்ந்து 15 ஆண்டுகள் தொடர்ந்து பயணித்திருக்கிறோம் நாகரீக வரம்புகளை மீறி பேசியதாக எதுவும் இல்லை.

தற்போது ஆர்ப்பாட்ட மேடையில் அவர்கள் பேசிய பேச்சு பொதுமக்களை முகம் சுழிக்கு மகள் அமைந்துள்ளது என்பது வருத்தம் அளிக்கிறது.

விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் தமிழக அரசு தள்ளுபடி செய்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும், கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான அரசின் தற்போதைய நிலைப்பாட்டில் விவசாயிகள் இன்னும் முழுமையான திருப்தி அடையவில்லை.

 இக்கோரிக்கையை நான் முதலமைச்சர் கவனத்திற்கு நேரிடையாக எடுத்துச் சென்றுள்ளேன்.

 இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.

நாடு முழுவதும் காலம் காலமாக அம்பேத்கர் சிலைகள் அவமதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


தமிழகத்தின் மின்வெட்டு இல்லை என்று தொடர்ந்து அமைச்சர்கள் கூறி வருகின்றார் என்ற கேள்விக்கு ......

அரசுத் துறை அதிகாரிகள் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே அமைச்சர்கள் சட்டமன்றத்திலும் ஊடகங்களிலும் பதில் அளிக்கிறார்கள். 


எனவே, அதிகாரிகள் மிகச் சரியான, துல்லியமான தகவல்களை அமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

தேர்தல்களில் 'திருமங்கலம் பார்முலா' போன்ற பண விநியோக முறைகளைப் பயன்படுத்துவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்துப் பேசிய அவர், "தேர்தல் களத்தில் பணத்தைக் கொட்டுவது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. வரும் தேர்தல்களில் இதுபோன்ற தவறுகள் நடக்கக் கூடாது.

 தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதில் மாநில அரசோ அல்லது மத்திய அரசோ பொறுப்பேற்க வாய்ப்பில்லை.


மாறாக, தேர்தல் ஆணையமே இதற்கு முழுப் பொறுப்பேற்று, கடுமையான நடவடிக்கைகளின் மூலம் இவற்றைத் தடுக்க வேண்டும்.


 தேர்தல் நடப்பது மட்டும் தேர்தல் ஆணையத்தின் கடமை அல்ல இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பதுதான் தேர்தல் ஆணையத்தின் முதன்மையான கடமை" 


விசிக மற்றும் திமுக இடையேயான கூட்டணி குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "நாங்கள் ஏதோ ஒரு குறுகிய காலக் காரணத்திற்காக இந்த கூட்டணியில் இல்லை. 


தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்களோடு பயணித்து வருகிறோம். 


நாங்கள் எப்படிப் பயணிக்கிறோம் என்பது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும். நாம் திமுகவிற்கு ஆதரவாகப் பேசுகிறோம் என்று கூறி, சிலர் துரோகப் பட்டியலை வாசிக்கிறார்கள்.


 நாங்கள் ஏதோ பதவிக்காகக் கூட்டணியில் நீடிக்கிறோம் அல்லது வெளியேறுகிறோம் என்று சித்தரிப்பது தவறான தோற்றம் இது சரியானது அல்ல.

விசிக தலைமைத்துவத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்படுகிற தாக்குதலாகவே இதைப் பார்க்கிறேன். 

கடந்த நான்கு மாதங்களாகவே சிலர் இதனைத் தொடர்ந்து பேசி வருகின்றனர் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages