தரைக்கடை, சிறு கடை வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு.... - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, September 28, 2026

தரைக்கடை, சிறு கடை வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு....



 
திருச்சி மாவட்ட தரக்கடை,சிறு கடை வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் அன்வர்தின், மாவட்ட பொருளாளர் அபுதாகிர் ஆகியோர் தலைமையில்  நிர்வாகிகள் இன்று திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

 நாங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக என் எஸ் பி ரோட்டில் தரைக்கடை வியாபாரம் செய்து வந்தோம். இந்நிலையில் வெண்டிங் கமிட்டி முடிவின்படி 10.01.2026 அன்று எங்களது தரைக்கடைகளை மாற்று இடம் தருவதாகக் கூறி காலி செய்தீர்கள். அதில் சில வியாபாரிகளுக்கு மாற்று இடம் சிங்காரத் தோப்பு, பூம்புகார் அருகில் இடம் கொடுத்துள்ளீர்கள். மீதமுள்ள வியாபாரிகளுக்கு சத்திரம் பேருந்து நிலையம் லலிதா ஜுவல்லரி அருகில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மஹாராஜா துணிக்கடை வரும் இடத்தில் வாசலைத் தவிர முன்பகுதியில் கடை வைத்துக் கொள்ள வெண்டிங் கமிட்டியில் முடிவு செய்தார்கள்.  
​இந்நிலையில் மஹாராஜா துணிக்கடை கட்டிட வேலை என்று அதிநவீன இயந்திரங்கள் வைத்து வேலை செய்ததால் வேலை முடிந்த பின்பு அங்கு மற்ற வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கமிட்டியில் மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்ததன் பேரில் நாங்கள் கடைகளைக் காலி செய்தோம். தெருவோர வியாபாரிகளின் வாழ்வுரிமைச் சட்டம் 2014-ன்படி மாற்று இடம் வழங்கிய பிறகே கடைகளைக் காலி செய்ய வேண்டும் என சட்டத்தில் உள்ளதால், நீங்கள் மாற்று இடம் வழங்காமல் எங்களைக் காலி செய்து விட்டீர்கள்.  
​அத்தோடு இல்லாமல் கட்டிட வேலை முடிந்த பிறகு எங்களுக்கு மஹாராஜா துணிக்கடை முன்பு கடை போட அனுமதிப்போம் என்று எழுத்துப் பூர்வமாகக் கொடுத்து விட்டு, கட்டிட வேலை முடிந்த பின்பும் எங்களுக்கு இன்று வரை கடை ஒதுக்கப்படவில்லை. மஹாராஜா சில்க்ஸ் வருகின்ற 02.10.2026 அன்று துவங்க உள்ள நிலையில் எங்களுக்குக் கடை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறீர்கள். கடந்த 9 மாத காலமாக சுமார் 65 வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.  
​ஆகையால் தாங்கள் தலையிட்டு 65 வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க எங்களுக்குக் கமிட்டியில் எடுத்த முடிவின்படி எங்களுக்கு அங்கே கடை போட அனுமதிக்க வேண்டுகிறோம் என மனுவில் தெரிவித்து உள்ளனர்..

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages