காவிரிஆற்றில் நீர்வரத்தால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி .. - tamilkalam

News Update

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 8, 2026

காவிரிஆற்றில் நீர்வரத்தால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி ..


திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி கதவணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது

அதிகரித்து வருகிறது.

98 மதகுகளை கொண்ட மாயனூர் காவிரி கதவணையில், சுமார் ஒரு டி.எம்.சி. அளவிற்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

நேற்று விநாடிக்கு 4,955 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 10,948 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனால் மாயனூர் காவிரி கதவணை இன்று முழுவதும் கொள்ளளவை எட்டியுள்ளது.

தற்போது கதவணையில் இருந்து விநாடிக்கு 10,068 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், தென்கரை வாய்க்காலில் 500 கனஅடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 350 கனஅடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 30 கனஅடியும் விவசாய பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றில் நாளுக்கு நாள் நீர்வரத்து அதிகரித்து வருவதால், கரையோர விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இன்று காலை நிலவரப்படி,

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 4100 கனடியாக உள்ளது.

 இதில் 3900 கன அடி நீர் காவிரியிலும், அய்யன் மற்றும் பெருவளை வாய்க்கால்களின் தலா 75 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages