திருச்சியில் திருமாவளவன் எம்பி பேட்டி.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் எம்பி, திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அளித்தார். அப்பேட்டியில் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அரசு வெளியிடும் கொள்கை விளக்கக் குறிப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டு வருவது தற்செயலானது அல்ல என்ற கேள்வி எழுகிறது. இது குறித்த முறையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் உரிய முறையில் அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற பிழைகள் மீண்டும் வராத வகையில் அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த
இசட் பிரிவு பாதுகாப்பில் காவலர்களின் எண்ணிக்கையை குறைத்தது ஏற்புடையதல்ல. அவருக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை எந்தவித மாற்றமுமின்றி தொடர்ந்து வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதற்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ள விமர்சனங்களையும், கோரிக்கைகளையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முழுமையாக வழிமொழிகிறது. தோழமைக் கட்சிகளைப் புண்படுத்தும் அல்லது காயப்படுத்தும் வகையிலான எந்தவொரு அணுகுமுறையும் ஏற்புடையதல்ல என்பதால், முதலமைச்சர் இதில் நேரடியாகத் தலையிட வேண்டும்.
தலித்துகளுக்கு செய்யப்பட்டவை அனைத்தும் ஏதோ கருணை அடிப்படையில் அல்லது பச்சாத்தாபத்தின் பெயரால் செய்யப்படக் கூடாது. மாறாக அது அவர்களின் அடிப்படை உரிமையின் கீழ் வழங்கப்பட வேண்டும் என்பதே விசிகவின் நிலைப்பாடு.
பொதுத் தொகுதிகளில் தலித்துகளை நிற்க வைத்து வெற்றி பெறச் செய்தோம் என்று கூறுவது இயல்பானதே, ஏனெனில் தலித்துகள் 234 தொகுதிகளிலும் போட்டியிட சட்டப்படி உரிமை பெற்றுள்ளனர். ஆனால், தலித் அல்லாதவர்கள் தனித் தொகுதிகளில் போட்டியிட முடியாது. எனவே, பொதுத் தொகுதிகளில் தலித்துகளை நிறுத்துவதை ஏதோ அவர்களுக்கு பரிதாபப்பட்டு செய்யும் உதவியைப் போல சித்தரிக்க கூடாது என்ற கோணத்தில்தான் வன்னியரசு பேசினாரே தவிர, அவரை தவறாக விமர்சிப்பதில் அர்த்தமில்லை.தவெக தலைமையிலான இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தலித் மக்களுக்கு இன்னும் பல சட்டப்பூர்வ உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன. குறிப்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்தியா முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அதிகாரிகளின் கருத்துக்களால் பல நல்ல திட்டங்கள் முடங்குகின்றன. ஆட்சியாளர்கள் விரும்பினாலும் அதிகாரிகள் சில இடங்களில் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியாக, தலித் மக்களின் மேம்பாட்டிற்காக அரசு செய்ய வேண்டிய அவசியமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் உரிய தீர்வுகளைப் பெற விசிக தொடர்ந்து குரல் கொடுக்கும் என திருமாவளவன் எம்பி. தெரிவித்தால்
No comments:
Post a Comment