திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்குள்ள தனியார் கல்லூரி அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மில் காலனியைச் சேர்ந்த ஜெய் (எ) ஜானகிராமன் (வயது 47) என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment